2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'பிரித்தானிய அரசாங்கத்தின் நலத்திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்'

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய அரசாங்கம் விலகியுள்ளபோதும், அந்த அரசாங்கத்தால்; இலங்கையில் முன்னெடுக்கப்படும் நலத்திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் தெரிவித்தார்.

மேலும், கடந்த யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளை கட்டியெழுப்புவதற்கு தேவையான உதவிகளை பிரித்தானியா தொடர்ந்து வழங்கும் எனவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாயச் சம்மேளன பிரதிநிதிகளுக்கும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு, மாமாங்கம் பிரதேசத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனக் காரியாலயத்தில் புதன்கிழமை (04) நடைபெற்றது.இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மாவட்டத்தின் தற்போதைய நிலைமை, கல்வி நடவடிக்கைக்கு பிரித்தானியாவின் ஆதரவு, கிழக்கு மாகாணத்தின் வர்த்தக நிலைமை தொடர்பில் இச்சந்திப்பின்போது  ஆராயப்பட்டன.

கிழக்கு மாகாணத்திலிருந்து பிரித்தானியாவுக்கு ஏற்றுமதியை  ஊக்குவிப்பது தொடர்பில் ஆராயப்பட்டதுடன், தரமான பொருட்களுக்கு பிரித்தானியா வரவேற்பு அளிக்கும் எனவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X