2025 மே 08, வியாழக்கிழமை

'பெரும்பான்மை இனத்தவர்களினால் கிழக்கில் சட்ட விரோத காடழிப்பு'

Niroshini   / 2015 நவம்பர் 30 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கிழக்கு மாகாணத்திலுள்ள காடுகள் பெரும்பான்மை இனத்தவர்களினால் தொடர்ந்தும் சட்ட விரோதமான முறையில் அழிக்கப்படுவதாக கிழக்கு மாகாண விவசாய, கால்நடை அபிவிருத்தி அமைச்சர் கே.துரைராஜசிங்கம் கவலை தெரிவித்தார்.

மேலும்,இந்த சட்டவிரோத காடழிப்புக்கு ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் பின்புலம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் இன்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைகளில் மாத்திரம் பொலன்னறுவை மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்;ந்த பெரும்பான்மை இன விவசாயிகளினால் சுமார் 6,500 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதை வன இலாகா அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு சட்டவிரோதமாக காடுகள் அழிக்கப்பட்டு வெளி மாவட்ட பெரும்பான்மை இனத்தவர்கள்; நெற் செய்கையிலும் சிறு தானியச் செய்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

மேலும்,காடுகள் அழிக்கப்படுவது சட்டவிரோதம் என வன இலாகாவினால் அந்த பகுதியில் பகிரங்கமாக அறிவித்தல்கள் இடப்பட்டுள்ளதுடன் சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படடுள்ளன.இருப்பினும், அவர்களின் செயற்பாடானது திருப்தியளிப்பதாக இல்லை.

மட்டக்களப்பு மாவட்டத்திற்குரிய 25 சதவீத வனப் பகுதியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு வன இலாகாவுக்குரியது எனத் தெரிவித்தார்.

மேலும்,காடுகள் சட்ட விரோதமாக அழிக்கப்படுவது தொடர்;பாக ஜனாதிபதியின் நேரடி கவனத்துக்கு தன்னால் கொண்டு வரப்பட்டு அறிக்கையொன்றும்; கையளிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மற்றும் வன இலாகாவுக்கு ஜனாதிபதியினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X