Suganthini Ratnam / 2016 ஜூன் 16 , மு.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
பெரும்பான்மையின மக்கள் மத்தியில் இனத் துவேஷம் கிடையாது. அவர்கள் சிறுபான்மையினராகிய தமிழ், முஸ்லிம் மக்களுடன் இணைந்து வாழவே விரும்புகின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த அரசியல்; தலைமைகள், தங்களின் இருப்பைத் தக்க வைப்பதற்காக இனவாதக் கருத்துகளையும் இன முரண்பாடுகளையும் நிலைநிறுத்திக்கொண்டனர் எனவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு, கொம்மாதுறை கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்துக்கான பால் சேகரிப்பு நிலையம் மாவடியோடைப் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததாக மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் மார் தட்டிக்கொண்ட போதிலும், சிறுபான்மையின மக்களின் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் எவ்வித கரிசனையும் காட்டவில்லை' என்றார்.
'சிறுபான்மையின மக்களின் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டாலும், பராவாயில்லை. பெரும்பான்மையின மக்களின் ஆதரவுடனும் இனவாதிகளின் ஒத்துழைப்புடனும் தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க முடியும் என்று எண்ணியதன் காரணமாக இரண்டு வருடங்களுக்கு முன்னராக ஜனாதிபதித் தேர்தலை அவர் நடத்தினார்.
அப்போது, பெரும்பான்மையின மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பினார்கள். சிறுபான்மையின மக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிக்க நினைத்தார்கள். இதன் அடிப்படையில் சிறுபான்மையின மக்களின் முழு ஆதரவுடன் இந்த நாட்டில் ஆட்சி மாற்றத்தின் ஊடாக நல்லாட்சி ஏற்பட்டது.
இந்த நாட்டில் இனவாதிகளின் ஒத்துழைப்புடன் ஆட்சியை ஏற்படுத்த முடியாது என்பதையும் சிறுபான்மையின மக்களின் ஆதரவு இன்றி ஆட்சி அமைக்க முடியாது என்பதையும் இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் குடம் போட்டுக்காட்டியுள்ளது' எனவும் அவர் மேலும் கூறினார்.

2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025