Suganthini Ratnam / 2016 நவம்பர் 08 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு, போரதீவுப்பற்றுப் பிரதேச செயலக அபிவிருத்திக்குழுக் கூட்டம் திங்கட்கிழமை (07) நடைபெற்றபோது, அச்செயலகத்தின் 43 கிராம சேவையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கி 47 திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன,
மீள்குடியேற்ற அமைச்சின் வேலைத்திட்டம் 75 சதவீதம் பூர்த்;தியாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சுரவணையடியூற்றுக் கிராமத்துக்கு தொண்டு நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்டுவந்த குடிநீர் திட்டத்தை விடுத்து தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் திட்டத்தின் கீழ் உள்வாங்கி அக்கிராமத்துக்கு குழாய் மூலம் குடிநீரை வழங்குதல், இப்பிரதேசத்தில் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படாமல் விடுபட்டுள்ள கிராமங்களுக்கு தேசிய நீர்வழங்கல்;
வடிகாலமைப்புச் சபை மூலம் குழாய் மூலம் நீர் வழங்க நடவடிக்கை எடுத்தல், இவ்வருடத்துக்குள்; 326 விண்ணப்பதாரர்களுக்கு மின்சாரம் வழங்குதல், எதிர்வரும் மார்ச் மாதத்துக்;குள் 10 கிலோமீற்றர் நீளம் கொண்ட யானைப் பாதுகாப்பு மின்சார வேலிகளை அமைத்தல், அடுத்த வருட இறுதிக்குள் இப்பிரதேசத்திலுள்ள யானை வரும் அனைத்து இடங்களிலும் மின்சார வேலைகளை நடுதல்,
48000 மாடுகள் உள்ள இப்பிரதேசத்தில் 10000 மாடுகளுக்கு மாத்திரம் வழங்கக்கூடிய மருந்துகள் உள்ளன. இவற்றுக்கு நடவடிக்கை எடுத்தல், அதிபர்கள் இல்லாமல் இயங்கும் பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமித்தல் போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
நீர்ப்பாசனம், விவசாயம், கால்நடை, கல்வி, சுகாதாரம், உள்ளுராட்சி, வீதி அபிவிருத்தி, மின்சாரம், குடிநீர், மீன்பிடி, வனபரிபாலனம், வனஜீவராசிகள், போக்குவரத்து போன்ற பல விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
மேலும், இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரசன்னமாகியிருக்கவில்லை. தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இதில் கலந்து கொண்டிருக்கவில்லை. இதில் கலந்து கொண்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா அவருக்கென ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமராமல் மக்களுக்காக ஒதுக்கீடு செய்திருந்த ஆசனத்தில் அமர்ந்தவாறு இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago