Thipaan / 2016 ஒக்டோபர் 11 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ்
“சிங்கள மக்கள் வாழ்ந்த இடங்களில், அவர்களை மீளக்குடியமர்த்துவதற்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால், தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்த இடங்களில் குடியேற்றுவதற்கு அனுமதிக்க மாட்டோம்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவத்தார்.
மட்டக்களப்பு, கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபையின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை (10) நடைபெற்றது. இதில் கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
“வாகரைப் பிரதேசத்தில், சிங்கள மக்கள் 178 பேர் வாழ்ந்தாக கிழக்கு மாகாண ஆளுநர், கடந்த ஒரு வருடமாகக் கூறிவந்தார். தற்போது அவர்கள் வாழ்ந்த காணிக்கான அனுமதிப்பத்திரம், சிங்கள மொழியில் அனுப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு போதும் சிங்களத்தில் காணி அனுமதிப் பத்திரம் வழங்கப்படவில்லை. ஆகவே, சிங்களத்தில் காணி அனுமதிப் பத்திரம் எவ்வாறு வந்தது. இவ்விடயம் தொடர்பாக ஆராயப்பட வேண்டும்.
சிங்கள மக்கள் வாழ்திருந்தால் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்திருக்க வேண்டும். விவசாயம் செய்திருந்தால் பி.எல்.ஆர் இருந்திருக்க வேண்டும். இடம்யெர்நதவர்கள் என்று கூறப்பட்டால், இங்கு வாழ்ந்த காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு பிறப்புப் பதிவுகள் வைக்கப்பட்டிருக்க வேண்டும். குறித்த கிராமத்துக்குச் சிங்களப் பெயர் இருந்திருக்மெனில் அதுவும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆவணங்கள் சரியான முறையில் சமர்பிக்கப்படாமல், அவர்களைக் குடியேற்ற முடியாது.
வாகரை புச்சாக்கேணி கிராமத்தில், பெர்மிட் காணிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதற்கான ஆவணஙகள் என்னிடம் உள்ளன. இது தொடர்பாக பிரதேச செயலாளர் நடவடிக்கையெடுக்க வேண்டும்” என்றார்
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago