2025 மே 10, சனிக்கிழமை

'பெற்றோரும் அக்கறை செலுத்த வேண்டும்'

Niroshini   / 2016 ஜனவரி 18 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளையின் கல்வி வளர்ச்சியில் மிகக்கூடிய அக்கறை செலுத்த வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள புதிய காத்தான்குடி றிஸ்வி நகர் அல் இக்பால் வித்தியாலயத்துக்கு இன்று(18) கணினி இயந்திரத்தை கையளிக்கும் வைபவத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பாடசாலை அதிபர் வி.ரி.எம்.கனிபா தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய அவர்,

பொதுவாக பின் தங்கிய பிரதேசங்களில் வாழும் பிள்ளைகளின் கல்வி நிலையை யாரும் கண்டுகொள்ளாமையினால் இப் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி பின்னடைந்து செல்கின்றது. கிராமப்புறங்களில் இருக்கும் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் மிக திறமையானவர்கள். அதனை வளர்ப்பதற்கு வளப்பற்றாக்குறையாக காணப்படுகின்றது. இதனால் அவர்களது கல்வி பின்னடைந்து செல்லுமே தவிர அவர்கள் திறமையற்றவர்கள் என கருதமுடியாது,

இப் பிரதேச மாணவர்களின் கல்வி கட்டாயம் வளர்ச்சியடைய வேண்டும். எதிர்காலத்தில் நகர்ப்புறத்தை விட்டு இவ்வாறான பின்தங்கிய பிரதேசங்களின் கல்வி வளர்ச்சிக்கு முன்னுரிமை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

தமது பிள்ளைகள் கல்வியில் உயர்நிலை அடைய வேண்டும் என்ற சிந்தனையுடனும் தியாகத்துடன் பாடுபடுகின்றார்கள்.

எனவே, இங்குள்ள ஒவ்வொரு பெற்றோர்களும் தியாக சிந்தனையுடனும் அர்பணிப்புடனும் தியாகத்துடனும் பாடுபட்டு தனது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்கி அவர்களை சிறந்ததோர் கல்விமான்களாக வளர்த்தெடுத்து இந்தநாட்டுக்கு நற்பெயரையும் கௌரவத்தினையும் பெற்று தரக்கூடிய நற்பிரஜைகளாக உருவாக்க வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X