Suganthini Ratnam / 2016 நவம்பர் 08 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்தில் போலி நாணயத்தாளுடன் கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் இருவரையும் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப்பிணையில் நேற்றுத் திங்கட்கிழமை களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதவான் எம்.றிஸ்வி விடுவித்துள்ளார்.
களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்திலுள்ள மதுபானச்சாலை ஒன்றில் மதுபானம் கொள்வனவுக்காக முச்சக்கரவண்டியில் சென்ற மூவரில் இவர்கள் இருவரும் 5,000 ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாளை வழங்கியுள்ளனர். இந்நாணயத்தாள் தொடர்பில் சந்தேகமடைந்த குறித்த மதுபானச்சாலை உரிமையாளர்கள், நாணயத்தாளை பரிசீலித்தபோது, அது போலியானது எனத் தெரியவந்தது. இதனை அடுத்து மேற்படி நபர்களை மடக்கிப்பிடித்து பொலிஸில் குறித்த மதுபானச்சாலை உரிமையாளர்கள் ஒப்படைத்துள்ளனர்.
5 minute ago
21 minute ago
32 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
21 minute ago
32 minute ago
3 hours ago