2025 மே 10, சனிக்கிழமை

2590 பட்டத்தாரிகள் கடமைகளை பொறுப்பேற்றனர்

Sudharshini   / 2016 ஜனவரி 18 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

நாடு முழுவதிலுமுள்ள அரசாங்க அலுவலகங்களில் இன்று திங்கட்கிழமை 2590 பட்டத்தாரிகள், கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர் என பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் வேலைவாய்ப்பற்று இருந்த 466 பேருக்கு பட்டதாரிப் பயிலுநர் நியமனக் கடிதங்கள் கிடைக்கப்பெற்றதை அடுத்து அவர்கள் கிழக்கு மாகாணத்திலும் மாகாணத்திற்கு வெளியேயும் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர்.

மட்டக்களப்பிலிருந்து 242 பேரும், அம்பாறையிலிருந்து 169 பேரும், திருகோணமலையிலிருந்து 55 பேருமாக மொத்தம் 466 பேர் கிழக்கு மாகாணத்திலிருந்து பயிலுநர் பட்டதாரிகளாக நியமனம் பெற்றுள்ளனர்.

கடந்த வருடம் ஜுலை மாதம் 09ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமைவாக நாடு முழுவதிலும் தொழில் வாய்ப்பற்றிந்த 2590 பட்டதாரிகளுக்கு கடந்த 12ஆம் திகதி அலரிமாளிகையில் பயிற்சிக்கான இணைப்புக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X