2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

'பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வில்லையெனின் மகளிர் அமைப்புகளின் உதவியுடன் போராட்டங்கள்'

Suganthini Ratnam   / 2017 மார்ச் 29 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு உடனடியாக அரசாங்கம் தீர்வு வழங்காவிடின், கிராமங்கள் தோறும் மகளிர் அமைப்புகளை ஒன்றுதிரட்டி போராட்டங்கள் நடத்தப்படும் என்று  மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்புகளின் ஒன்றியம் எச்சரித்துள்ளது.  

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள்  சத்தியாக்கிரகக் போராட்டம் காந்தி பூங்காவுக்கு முன்பாக 37ஆவது நாளாகவும் இன்று (29) இடம்பெற்றது. இவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மேற்படி ஒன்றியம் காந்தி பூங்காவுக்கு முன்பாக இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டது.

மேற்படி ஒன்றியத்தின் தலைவி திருமதி செல்வி மனோகர் மேலும் தெரிவிக்கையில், 'வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் போராட்டம் தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் பாராமுகமாகவே உள்ளது.

இயற்கை அனர்த்தம் மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் கடும் கஷ்டத்துக்கு மத்தியில் கல்வி கற்று வந்தனர்.  எனவே, வேலையற்ற பட்டதாரிகளின் கோரிக்கைக்கு விரைவில் அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X