Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 24 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
வாகரைப் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட வட்டவான் மாதிரி இறால் பண்ணையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
வட்டவான் இறால் பண்ணையாளர்கள்; எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம், பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர் 'சுனாமியால் பாதிக்கப்பட்ட வாகரைப் பிரதேச மக்களை பொருளாதாரத்தில் முன்னேற்றுவதற்காக 27 பயனாளிகளை இணைத்து 27 ஏக்கரில் வட்டவான்; மாதிரி இறால் பண்ணை ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இப்பண்ணை நட்டத்தில் இயங்குவதாக கணக்குக் காட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பண்ணை நிர்வாகச் செயற்பாடுகளில் பயனாளிகள் பங்குகொள்ள வேண்டும்;. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கலந்துரையாடி இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்'
'இறால் வளர்ப்பின் மூலம் அதிகளவான அந்நியச் செலாவணியைப் பெறமுடியும்.
பண்ணையாளர்கள் உற்பத்தியை அதிகரிப்பதற்கு தேவையான கடன் வழங்கவும் வங்கிகள் தயாராகவுள்ளன.
சில பண்ணையாளர்கள் வேறு தொழில் செய்வதினால், பண்ணை நடவடிக்கையில் பங்குகொள்வதில்லையெனத் தெரியவருகின்றது. இத்தொழிலை விருத்தி செய்ய முயற்சி எடுக்க வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.
'மேலும், யுத்தத்தின் பின் மீள்குடியேற்றப்பட்ட மக்களின்; வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1,600 பயனாளிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்குவதற்கு மீள்குடியேற்ற அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், 300 பேர் மாத்திரம் கடன் பெற்றுள்ளனர். இவ்வாறான நல்ல திட்டங்களை மக்கள் பயன்படுத்தி வாழ்வாதாரத்தை முன்னேற்ற வேண்டும்' எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago