Suganthini Ratnam / 2016 நவம்பர் 17 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கரவெட்டி, விளாவெட்டுவான் ஆகிய கிராமங்களில் மானிய அடிப்படையில் வீடு பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி செய்த ஒருவரை இன்று வியாழக்கிழமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இந்த நபர் அப்பகுதி மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு கிராம அலுவலர் ஊடாக தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவரைக் கைதுசெய்துள்ளதாக வவுணதீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர், மாவட்ட வீட்டுத்திட்டம் தொடர்புடைய அரசாங்க உத்தியோகத்தர் எனவும் வீடுகள் வழங்கப்படாதோருக்கு அவர்களது நிலைமைகளை பரிசீலனை செய்து வீடுகள் வழங்க சிபாரிசு செய்ய தான் வந்ததாகவும் கிராம மக்களிடம் கூறியிருக்கின்றார்.
அரசினால் மானியமாக வழங்கப்படும் வீட்டுத்தினூடாக வீட்டினை சிபாரிசு செய்வதனால் பண உதவி வழங்கினால் விரைவாக முன்னிலைப்படுத்தி பெற்றுக் கொடுக்கப்படும் எனக் கூறியபோது, கிராம மக்கள் பலர் இரண்டாயிரம், ஏழாயிரம் என்று பணம் வழங்கியுள்ளனர்.
இதனை சந்தேகம் கொண்ட சில கிராம இளைஞர்களும் கிராம உத்தியோகஸ்தரும் இவரைப் பிடித்து விசாரித்தபோது போலியான அரச அலுவலர் என தெரியவந்ததையடுத்து கிராம உத்தியோகஸ்தர் ஊடாக வவுணதீவு பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
குறித்த சந்தேக நபரை மட்டக்களப்பு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவில் வைத்து, வவுணதீவு பொலிஸாரும் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
9 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
52 minute ago
1 hours ago