2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

முக்கொலைச் சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிப்பு

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 23 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காக்காச்சிவட்டை பகுதியில் இடம்பெற்ற முக்கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டவரை எதிர்வரும் 06ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதவான் எம்.ஐ.எம்.றிஸ்வி உத்தரவிட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை இந்த வழக்கு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

அத்துடன் கொலைசெய்யப்பட்ட இடத்தில் பெறப்பட்ட தடயப்பொருட்களையும் உடல் பாகங்களையும் இராசாயனப்பகுப்பாய்வுக்கு அனுப்பிவைக்குமாறும் நீதவான்  உத்தரவிட்டுள்ளார்.

24.07.2016 அன்று அதிகாலை ஒரு மணியளவில் பேரின்பம் விஜித்தா (வயது 24), பிரசாந்தன் சஸ்னிகா (வயது 18 மாதங்கள்) மற்றும் கந்தையா பேரின்பம் (வயது 56) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

மனைவியும் குழந்தையும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் வீட்டிற்குள் புகுந்த விஜித்தாவின் கணவரான பிரசாந்தன் (வயது 34) விஜித்தாவையும் அவரது ஒன்றரை வயதுக் குழந்தையையும் வெட்டிக் கொலை செய்து வீட்டுக் கிணற்றில் வீசியிருந்ததுடன் விஜித்தாவின் தந்தையினையும் வெட்டிக் கொலை செய்யததாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் விஜித்தாவின் கணவர் கைதுசெய்யப்பட்டு அது தொடர்பான வழக்கு களுவாஞ்சிக்குடி, நீதவான் நீதமன்றில் நடைபெற்று வருகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X