2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

மாகாணசபை உறுப்பினருக்கு இடையூறு: கூட்டமைப்பு கண்டனம்

Niroshini   / 2016 மே 06 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, வாழைச்சேனை கண்ணகிபுரத்தில் கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வொன்றின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) உரையாற்றிக் கொண்டிருந்தபோது அவருக்கு இடையூறு விளைவித்து குழப்பத்தை ஏற்படுத்திய சம்பவத்துக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

அவர் இந்நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிக் கொண்டிருக்கையில் நபர் ஒருவர் இடையூறு செய்து வன்முறை ஏற்படும் வண்ணம் நடந்துகொண்டார்.

இவ்வாறான செயற்பாடுகள் எமது ஆதரவாளர்களை உணர்ச்சிவசப்படுத்தி அவர்களை தவறான பாதைக்கு திசைதிருப்பலாம். எனவே, விபரீதமான செயற்பாடுகளுக்கு வழிகோல வேண்டாம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X