Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 29 , மு.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
மாகாணசபையின் அதிகாரங்களை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கம் முயற்சி செய்தால், அதற்கு ஒருபோதும் நாம் ஆதரவளிக்க மாட்டோம் எனக் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் பாலர் பாடசாலைக் கல்விப் பணியகத்தின் ஏற்பாட்டிலான கண்காட்சி, கத்தான்குடி அந் நாசர் வித்தியாலயத்தில் புதன்கிழமை (28) நடைபெற்றது. இதன் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றியபோது,'விசேட அமைச்சர்கள் என்ற விடயத்தை நல்லாட்சி அரசாங்கம் அறிமுகப்படுத்துவதன் மூலமாக மாகாணசபைகளுக்கு உள்ள அதிகாரங்களை மத்திய அரசாங்கத்துக்கு வழங்கி மாகாணசபைகளை எத்தகைய அதிகாரங்களும் அற்ற ஒன்றாக மாற்ற முயற்சிக்கின்றது.
நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவந்த பின்னர், மாகாணசபையின் அதிகாரங்களை இல்லாமல் செய்வதற்கு அவர்கள் முயற்சி செய்வார்களாயின், அதற்கு நாம் துணை போகமாட்டோம் என்பதை மத்திய அரசாங்கத்துக்குக் கூறியிருக்கின்றோம்' என்றார்.
'மக்களை ஏமாற்றி, அரசியல் அதிகாரங்களை பெற்றுக்கொள்ளும் நிலைமை எமது சமூகத்தில் நீங்க வேண்டும். அரசியல் தலைமைகள் தேர்தல் காலங்களில் மாத்திரம் செயற்படுவதும் போலியான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றுவதும் எமது சமூகத்தில் ஒழிக்கப்பட வேண்டும்.
போலியான வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கி, அரசியல் அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ளும்போது, அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றா விட்டால் மீண்டும் ஐந்து வருடங்கள் மக்கள்; காத்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்படும்' என்றார்.
24 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago
3 hours ago