Suganthini Ratnam / 2016 ஜூன் 27 , மு.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையை பணயக்கைதியாக வைத்து இனிமேலும் அரசியல் செய்வதற்கு இடமளிக்கப் போவதில்லை என மு.கா. தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல்; அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
மு.கா.வின் ஒன்றுகூடல் நிகழ்வு காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (26) மாலை நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'மு.கா. தலைமையை அவமானப்படுத்துவதற்காக கடந்த காலத்தில்; அதை அடிப்படையாக வைத்து தங்களுடைய பதவிகளுக்காக பேரம் பேசியவர்கள் இனிமேலும் இந்தக் கட்சியின் தலைமையை பணயக்கைதியாக வைத்து அரசியல் செய்ய முடியாது என்பதை தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
என்ன நாடகமாடினாலும் பிளவுகள் மற்றும் பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சித்தாலும் அந்த முயற்சிகளில் யாரையும் கட்சியிலிருந்து வெளியேற்றும் நோக்கம் கட்சிக்கும் கிடையாது' என்றார்.
'மு.கா. எடுத்த தீர்மானங்களை கட்சியினுடைய அரசியல் யாப்பின் படி எங்களுடைய பேராளர் மாநாட்டிலேயே மாற்ற முடியும். அதைத் தவிரவும் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது. இந்த விடயத்தில் கட்சித் தலைமை உறுதியாக இருக்கின்றது.
பதவி நோக்கத்தில் யாரும் இந்தக்கட்சியை அடகு வைத்து பிழைப்பதற்கு இனிமேலும் நாம் இடமளியோம்' என்றார்.
'இந்த நாட்டு அரசியலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னணியில், சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் தலைமைகளில் மூன்று பிரிவினர்களாக இருக்கின்ற தமிழ் மக்களின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் முஸ்லிம்களின் அரசியல் தலைமைகள் என்ற வகையில் முஸ்லிம் காங்கிரஸாகிய நாங்களும் மலையகத் தலைமைகளும் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்ற காலகட்டத்தில் இருக்கின்றோம்.
அக்கிரமமான ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து இந்த நாட்டை சுபீட்சத்துக்கு கொண்டுவந்தது மாத்திரமல்ல, இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சி முன்னெடுக்கப்படுகின்றது. இச்சூழ்நிலையில், ஆளுக்கு ஆள் தர்க்கிக்கும் நிலைமையை எங்களுக்குள் உருவாக்காமல் பாதுகாப்பதற்காக நல்லெண்ண முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சில நல்லெண்ண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் நல்ல ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளன. அவற்றுக்கான அறிவிப்பு அடுத்த வாரம் வரவுள்ளது' எனவும் அவர் கூறினார்.
23 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
9 hours ago