2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

20 மைக்ரோனுக்கும் குறைவான பொலீத்தின்களைப் பயன்படுத்திய வர்த்தகர்கள் எச்சரிக்கப்பட்டனர்

Suganthini Ratnam   / 2016 மே 04 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

இருபது மைக்ரோனுக்குக் குறைவான பொலித்தீன்  பாவனையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான செயற்பாடுகள் மட்டக்களப்பு மாநகர சபையால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மட்டக்களப்பு மாநகர சபை பொதுச் சந்தையில் தேடும் நடவடிக்கையும் விழிப்புணர்வு  வேலைத்திட்டமும் இன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, 20 மைக்ரோனுக்கும் குறைவான பொலீத்தின்களைப் பயன்படுத்திய சுமார் 25 வர்த்தகர்கள் எச்சரிக்கப்பட்டனர்.

மேலும், இது தொடர்பான அறிவித்தல்கள் பொதுச்சந்தை உள்ளிட்ட பகுதிகளில்  ஏற்கெனவே ஒட்டப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X