2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடிப்பு; இருவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 13 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு அருகில் வியாழக்கிழமை காலை வைக்கோல் ஏற்றிக்கொண்டுவந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, திடீரென்று தீப்பிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் காரணமாக குறித்த இடத்தில் சிறிதுநேரம் பதற்ற நிலைமை காணப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

வாகனேரிப் பிரதேசத்திலிருந்து கிரான் பிரதேசம் நோக்கி குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர், வைக்கோலையும் கொண்டுசென்றுள்ளனர்.

இதன்போது, மோட்டார் சைக்கிளி;ன் புகைபோக்கியினுள் வைக்கோல்  உட்புகுந்ததால் தீப்பற்றிக் கொண்டுள்ளது.
தீ பிடிப்பதைக் கண்ட மேற்படி இருவரும் மோட்டார் சைக்கிளை அவ்விடத்தில் விட்டு சென்றுள்ளனர்.

இதனை அடுத்து, குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரையும் கைதுசெய்து விசாரணை செய்து வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X