2025 மே 08, வியாழக்கிழமை

'மாணவர்கள் மத்தியில் இலக்கியம் வளர்க்கப்பட வேண்டும்'

Niroshini   / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மாணவர்கள் மத்தியில் இலக்கியம் வளர்க்கப்பட வேண்டும் என காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர் தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற மாணவர்களுக்கான இலக்கிய வேலைப்பட்டறையை ஆரம்பித்து வைக்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மாணவர்கள் கலை இலக்கியத்தில் ஆர்வம் காட்ட வேண்டும்.தமது கலாசார பாரம்பரியங்களுக்குள் நின்று இலக்கியத்தை மேம்படுத்த வேண்டும் என்றார்.

இந்த செயலமர்வில் காத்தான்குடி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் எம்.எச்.ஜவாத், கலாசார அபிவிருத்தி உதவியாளர் மௌலவி எம்.சி.எம்.றிஸ்வான் மதனீ,மட்டக்களப்பு மாவட்ட கலாசார உதவியாளர் ரி.மலாச்செல்வன், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, மாணவர்களுக்கு கவிதை,கட்டுரை மற்றும் கதைகள் எழுவது தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X