Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2015 செப்டெம்பர் 08 , பி.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
2005ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் வாக்களிக்காது செய்த குற்றத்தை இந்த ஆண்டில் திருத்தி கொண்டனர். மஹிந்த ஆட்சியை தோற்கடித்து நல்லாட்சியான மைத்திரி ஆட்சியை கொண்டுவந்துள்ளனர். இது வரவேற்கத்தக்க விடயமாகும்.மஹிந்த சிந்தனையில் இருந்து மைத்திரி சிந்தனை முற்றிலும் வேறுபட்டது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட மகிழவட்டவானில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வரவேற்பு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாங்கள் எதிர்க் கட்சியில் இருந்தாலும் எமது பகுதிகளுக்கும் அபிவிருத்தி செய்வதற்குரிய வழிவகைகளை ஏற்படுத்துவோம்.தற்போதைய நிலையில் நாடாளுமன்றத்தின் மூன்றாவது அரசியல் சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காணப்படுகின்ற போதும் எதிர்க் கட்சித் தலைவராக சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அனுபவமும் அரசியலில் தேர்ச்சியும் வாய்ந்த அரசியல் தலைவரின் கீழ் இனிவரும் காலத்தில் எமது பிரதேசத்தின் அடிப்படை தேவைகள் ஓரளவேனும் பூர்த்தி செய்யப்படக் கூடிய வாய்ப்புள்ளது.
கடந்த காலங்களில் நாட்டில் அமைச்சு பதவி வகித்தால் தான் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்ற ஒரு காலம் இருந்தது.அந்நிலை தற்போது இல்லை.
ஜனாதிபதியும் பிரதமரும் எதிர்க் கட்சிகளின் அபிலாஷைகளை தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாகவும் இன,மத ரீதியான குரோதங்களை ஏற்படுத்தாது கன்னியமான முறையிலும் நடந்துகொள்கின்றனர்.
இந்நிலை தொடருமேயானால் எதிர்வரும் காலங்களில் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்ற நம்பிக்கை உள்ளதுடன் அதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுப்பட்டுள்ளது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago
8 hours ago