Suganthini Ratnam / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சபேசன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தொழிற்சங்கங்களும் இணைந்து நடத்தும் மே தினக் கூட்டம், மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு நடைபெறவுள்ளது.
மேலும், மட்டக்களப்பு சாந்தி சதுக்கத்தில் ஆரம்பிக்கும் பேரணி திருமலை வீதி மற்றும் பார் வீதி ஊடாகச் சென்று மண்டபத்தை அடைந்து பொதுக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி முச்சக்கரவண்டிச் சாரதிகள் சங்கத்தின் மே தின ஊர்வலம் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளதாக காத்தான்குடி முச்சக்கரவண்டிச் சாரதிகள் சங்கம் தெரிவித்தது.
இச்சங்கத்தின் மே தின ஊர்வலம் காத்தான்குடி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாகவிருந்து ஆரம்பமாகி காத்தான்குடி பிரதான வீதி மற்றும் ஊர்வீதி வழியாக சென்று காத்தான்குடி முச்சக்கரவண்டிச் சாரதிகள் சங்க அலுவலகத்துக்கு முன்பாக நிறைவு பெறுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மே தின ஊர்வலத்தில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளதாக மேற்படி சங்கத்தின் தலைவர் எம்.அபுல் பஸல் தெரிவித்தார்.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago