Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜனவரி 19 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேராளர் மாநாட்டில் ஏறாவூரைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளாமல் பகிஷ்கரித்தார்கள் என்பது பொய் என்பதுடன், அந்த மாநாட்டுக்கு ஏறாவூரிலிருந்து அழைக்கப்பட்ட ஐந்து பேரும் கலந்துகொண்டதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏறாவூர் முக்கியஸ்தரும் சமூக சேவையாளருமான எம்.எல்.ஏ.அப்துல் லதீப் ஹாஜி தெரிவித்தார்.
இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், '17.1.2016 அன்று குருநாகலில் நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் போராளர் மாநாட்டுக்கு ஏறாவூரிலிருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏறாவூர் முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளாமல் பகிஷ்கரிப்புச் செய்ததாக அக்காங்கிரஸின் ஏறாவூர் முக்கியஸ்தர் ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பாக 18.1.2016 அன்று சில ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த தகவல் பொய்யானதாகும். ஏனெனில், இந்த மாநாட்டுக்கு ஏறாவூரிலிருந்து அழைக்கப்பட்டிருந்த நான் உட்பட ஐந்து முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டோம்.
அத்தோடு குறித்த மாநாட்டு தினத்தன்று ஏறாவூரில் கறுப்புக்கொடி தொங்கவிடப்பட்டமையானது ஏறாவூர் மக்களினால் செய்யப்பட்டதல்ல. ஏறாவூர் மக்கள் என்றுமே நிதானமாக சிந்தித்து செயல்படுபவர்கள். ஏறாவூர் மக்களுக்கும் இந்தக் கறுப்புக்கொடி தொங்கவிடப்பட்டதற்கும் எந்த தொடர்பும் கிடையாது.
ஏறாவூரிலுள்ள இக்கட்சியின் முன்னாள் உறுப்பினர்களில் ஓரிருவர் இந்தச் செயலை செய்திருக்கக்கூடும். அதற்காக முழு ஏறாவூரும் மாநாட்டை பகிஷ்கரித்ததாக கூறமுடியாது. எமது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் எமது கட்சியின் தவிசாளர் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோருடன் சிறந்த வழிகாட்டலுடன் எமது கட்சி நடவடிக்கைகளை ஏறாவூர் பிரசேத்திலும் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றோம்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எமது இந்தக் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டிருந்தேன் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago