Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 மார்ச் 04 , மு.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து சர்வதேச மகளிர் தினமான மார்ச் 08ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதிவரை இருண்ட நாட்களாகப் பிரகடனப்படுத்தவுள்ளதாகவும் எனவே, வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் கறுப்புக்கொடிகளைத் தொங்கவிடுமாறும் கறுப்புப்பட்டிகளை, கறுப்பு உடைகளை அணியுமாறும் ஒன்றிணைந்த பெண்கள் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு, வடமாகாண பெண்கள் மாற்றத்துக்கான பரிந்துரை செய்யும் வலையமைப்பு, பெண்கள் செயற்பாட்டுக்கான வலையமைப்பு என்பனவே இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளன.
இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள துண்டுப்பிரசுரங்களில், 'பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளும் கொலைகளும் மிகவும் மோசமான முறையில் நாடளாவிய ரீதியில் அதிகரித்து வருகின்றன. இந்த வன்முறைகளுக்கான நீதி இதுவரையில் கிடைக்கவில்லை என்பதுடன், நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை அற்றும் போயுள்ளது.
எனவே, மகளிர் தினமான மார்ச் 08 இலிருந்து இந்த முழு மாதத்தையும்; நாம் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கு இருண்ட நாட்களாக பிரகடனப்;படுத்தவுள்ளோம்;' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாம் ஒருபோதும்,
•பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எமது சமூகத்தில் நிகழ அனுமதிக்கமாட்டோம்
•பெண்களுக்கு எதிரான வன்முறையாளர்களாக நாங்கள் இருக்கவும் மாட்டோம்
•பெண்களுக்கு எதிரான வன்முறையாளராக எமது ஆண்கள் மாற அனுமதிக்கமாட்டோம்
•பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான நீதி கிடைக்கும்வரை நாம் ஓயமாட்டோம்
என்பதைக்காட்ட எமது வீடுகளிலும் கடைகளிலும் அலுவலகங்களிலும் மார்ச் 8ஆம் திகதி முதல் கறுப்புக் கொடிகளை தொங்கவிடுவோம். கறுப்பு உடைகள், கறுப்புப் பட்டிகளை அணிவோம். இனிவரும் நாட்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அற்ற சமூகம் காண்போம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
46 minute ago
1 hours ago
2 hours ago