2025 மே 09, வெள்ளிக்கிழமை

'முறையாக இணைக்காமை கவலைக்குரியது'

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,எஸ்.பாக்கியநாதன்

தமிழ் மக்கள் பேரவையில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பை முறையான வகையில் இணைக்காமை  கவலைக்குரிய விடயமென மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமாங்கராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில்; திங்கட்கிழமை (28) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'தமிழ் மக்கள் பேரவைக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்லர். ஆனால், எந்த விடயத்திலும் வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். எமக்கு ஆலோசகராக உள்ள ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையிடமோ அல்லது நிர்வாக சபையிடமோ தொடர்பு கொண்டு இது தொடர்பில் கலந்துரையாடியிருக்கலாம்' என்றார்.

'மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் செயலாளர் உட்பட மூவர் தமிழ் மக்கள் பேரவையில் இணைந்துள்ளனர். அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பு என்று தங்களை வெளிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பில் ஊடகங்களிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையை விமர்சித்து வருவோர் எங்களிடம் தொடுக்கும் வினாக்களுக்கு விடை அளிக்கவேண்டிய நிலையில் நாங்கள் உள்ளோம். இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் நிர்வாக சபையின் அனுமதியின்றி;ச் சென்றவர்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X