Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை அரசாங்கத்திடம் முன்வைப்பதற்காக முஸ்லிம் அரசியல் மற்றும் சமூகப்பற்றுள்ள தலைவர்களை உள்ளடக்கிய பேரவையொன்று உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகியுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள அரசியல் தலைவர்கள் முஸ்லிம்களின் உரிமை பற்றியும் வடமாகாணத்திலுள்ள முஸ்லிம் அரசியல் தலைமைகள் முஸ்லிம்களின் மீள்;குடியேற்றம் பற்றியும் ஊடக விளம்பரங்களுக்காக பேசிப்பேசி தங்களின் அரசியல் இருப்புகளை உறுதிப்படுத்துவதிலேயே முனைப்புடன் செயற்படுவதாகவும் அவர் கூறினார்.
சமூக அமைப்புகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நடவடிக்கை, ஏறாவூர் நகர பிரதேச செயலக மண்டபத்தில் செவ்வாய்கிழமை (29) மாலை நடைபெற்றது. இங்கு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தற்போது அரசாங்கத்தில் பங்காளிகளாகவுள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகள், சமூகத்துக்காக இதுவரையில் எதனையும் சாதிக்கவில்லை' என்றார்.
'மர்ஹும் அமைச்சர் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் காலத்திலிருந்து இடைக்கிடையில் கரையோர மாவட்டம் பற்றிய கோரிக்கையை பேசிப்பேசி தற்போது அது கரைந்துவிட்டது. எனினும், முஸ்லிம்களின் உரிமைகள் வெல்லப்பட வேண்டுமென்ற வெற்றுப்பேச்சே தற்போது எஞ்சியுள்ளது. இதில் ஆரோக்கியமான பலன் எதுவுமில்லை.
அவ்வாறே, வடபகுதியைச் சார்ந்த முஸ்லிம் சமூகத்தின் மீள்;குடியேற்றம் பற்றி பேசி விளம்பரப்படுத்துவதன் காரணமாக இந்நாட்டின் பேரினவாதிகள் இறைமைக்கு குந்தகம் ஏற்படுத்துவதாக சமூகத்தைக் கொச்சைப்படுத்துகிறார்கள். அந்த வகையில், முஸ்லிம் அரசியல் தலைமைகள் சுய விளம்பரத்துக்காகவும் தமது அரசியல் இருப்பை உறுதிப்படுத்துவதற்குமாகவே கங்கணத்துடன் அலைகின்றனர்.
ஆனால், அரசாங்கத்தின் பங்காளிகள் இல்லாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது கோரிக்கைகள் பற்றி விளம்பரப்படுத்தாமல், தமது காரியங்களை கச்சிதமாக சாதிக்கின்றனர்' எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago