2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

'முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்'

Suganthini Ratnam   / 2017 மார்ச் 27 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

முஸ்;லிம்களுக்கு மிகப் பெரிய சவாலாகக் காணப்படும்; காணிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் இதுவரையில் முன்வரவில்லை. எனவே, முஸ்லிம்களின் காணிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு  நல்லாட்சி அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹீர் மௌலானா தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் ஜனாதிபதி அல்லது பிரதமர் தலையிட்டு, காணி ஆணைக்குழுவை நியமித்து காணி இல்லாத முஸ்லிம்களுக்கு காணிகளை வழங்குவதற்கு முன் வரவேண்டும் எனவும் அவர் கூறினார்.

முஸ்லிம் காங்கிரஸின் எழுச்சிக் கூட்டம்;, காத்தான்குடியில் ஞாயிற்றுக்கிழமை (26)  இரவு நடைபெற்றது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'சிறுபான்மையினச் சமூகமாக மட்டக்களப்பில் வாழும் முஸ்லிம் மக்களின் காணிப் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட வேண்டும். பல தடவைகள் எமக்கான காணிப்பங்கீடு பற்றி கேட்டபோதெல்லாம், அதில் அக்கறை இல்லாது அதை கிடப்பில் போடப்பட்டுள்ளதையே எம்மால்; அவதானிக்கக் கூடியதாக உள்ளது' என்றார்.

'மேலும், இந்த நாட்டில் முஸ்லிம்கள் இரண்டாந்தரப் பிரஜை அல்ல. நாங்களும் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் முதன்மையானவர்கள். முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் அரசியல் வேறு ஆத்மிகம் வேறு என்று பிரித்துவிட முடியாது. ஆத்மிகத்துடன்  அரசியல் செய்யும்போதே, பல சவாலான விடயங்களைச் செய்ய முடியும். முஸ்லிம் சமூக அரசியலில் வலுவான தலைமைத்துவமாக காணப்படும் முஸ்லிம் காங்கிரஸை  பலப்படுத்த முன்வர வேண்டும்' என்றார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X