2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

'முஸ்லிம் மதவாதிகளே மஹிந்தவை சக்தி மிக்கவராக உருவகப்படுத்தினர்'

Niroshini   / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

முஸ்லிம் மதவாதிகள் சிலர் மக்களால் நிராகரிக்கப்பட்ட மஹிந்தவை மீண்டும் சக்தி மிக்கவராக உருவகப்படுத்தி முஸ்லிம் மக்களைக் கோழைகளாக ஆக்கினர் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டதையடுத்து நேற்று புதன்கிழமை இரவு ஏறாவூரில் இடம்பெற்ற பிரார்த்தனை நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இராஜாங்க அமைச்சரான ஹிஸ்புல்லாஹ் தன்னந்தனியாக நின்று மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெறும் 127 வாக்குகளாலேயே தோல்வியடைந்தார்.அவரது தோல்விக்கு இந்த மதவாதிகளின் பொய்ப் பிரசாரமே காரணமாகும்.

ஹிஸ்புல்லாஹ்வுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் பதவியானது கிழக்கு மாகாண மக்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள கௌரவமாகும் என்றார்.

மேலும்,நாங்கள் இந்த புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சினூடாக அரசியல் காழ்ப்புணர்ச்சியின்றி எங்களால் முடிந்தததை தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்குச் செய்வோம் அதுவே எங்கள் முன்னாலுள்ள பணியாகும் எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X