Sudharshini / 2016 மே 20 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவது மனிதாபிமான கடமை என ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.சி.எம். ஷயீட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 'ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், ஜம்மிய்யத்துல் உலமா சபை மற்றும் சமூக நிறுவனங்களும் இணைந்து பொருளாகவோ பணமாகவோ நிவாரணங்களைச் சேகரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை அனர்த்தம் ஏற்பட்ட போது, மலையக மக்கள் உட்பட நாட்டின் இதர பிரதேசங்களில் வாழும் மக்கள் ஓடிடோடி வந்து உதவிக்கரம் நீட்டியிருந்தார்கள்.
அந்த மக்கள் தற்போது பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு உதவுவது நமது மனிதாபிமானக் கடமை. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண சேகரிப்பு வெள்ளிக்கிழமை தொடக்கம் இடம்பெறும்' என்றும் அவர் கூறினார்.
8 minute ago
16 minute ago
32 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
16 minute ago
32 minute ago
35 minute ago