2025 மே 12, திங்கட்கிழமை

'மக்களின் காலடிக்கு சென்று பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 01 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மக்களின் காலடிக்கு அரசியல்வாதிகள்; சென்று அவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

வீதிக்கு ஒரு நாள் எனும் மக்கள் நடமாடும் சேவை, காத்தான்குடி கிழக்கு 167 பி கிராம உத்தியோகஸ்தர் பிரிவில்  இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'அரசியல் என்பது மக்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்குச் செய்யும் சேவைகளாகும். அரசியல்வாதிகள் மக்களுக்காக அர்ப்பணிப்புடன்  சேவையாற்ற வேண்டும்' என்றார்.

'மக்களின் காலடிக்குச் சென்று அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக வீதிக்கு ஒரு நாள் எனும் நடமாடும் சேவையை ஆரம்பித்துள்ளேன்.

வாரத்தில் திங்கள், புதன் மற்றும்  வியாழக்கிழமைகளில் நடைபெறும் இந்த நடமாடும் சேவையை மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் நடத்துவதற்கு மேற் தீர்மானித்துள்ளேன்.

இதன்போது, இயன்றளவு மக்களின் தேவைகளை  நிறைவேற்றிக் கொடுப்பதுடன், முடியாத பிரச்சினைகளை உரிய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவரவும் எண்ணியுள்ளேன்.

கடந்த அரசாங்கத்தில் சுயமாக நாம் செயற்படுவதற்கு நிலைமை இருக்கவில்லை. இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் மக்களின் தேவைகளை கேட்டறிந்து சுயமாக செயற்படுவதற்கும் நிறைவேற்றுவதற்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X