2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

மகனை குத்திக்கொலை: தந்தை தற்கொலை ; குழந்தையுடன் கிணற்றில் குதித்த தாய்

Niroshini   / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா, ஆர்.ஜெஸ்ரீராம்

தந்தையொருவர் தனது மகனை கத்தியால் குத்தி கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவமொன்று, வவுணதீவு, கண்ணங்குடா பரித்திச்சேனை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாமோதிரம் மகேந்திரன் (வயது 30) என்பவரே இவ்வாறு தனது எட்டு வயதான ரி.வினோத் எனும் மகனை கத்தியால் குத்தி கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதையடுத்து குறித்த நபரின் மனைவி மகேந்திரன் குணலட்சுமி தனது நான்கு மாதக் குழந்தையுடன் தனது வீட்டிலிருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார்.

அயலவர்கள் தாயையும் குழந்தையையும் மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும், குழந்தையின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X