2025 மே 09, வெள்ளிக்கிழமை

மட்டு. புனித மிக்கேல் கல்லூரியின் சிரேஷ்ட பிரிவு 7இல் ஆரம்பம்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 05 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணி மேற்கொள்ளப்படுவதினால், மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் சிரேஷ்ட பிரிவு எதிர்வரும் 07ஆம் திகதி ஆரம்பமாகுமென அக்கல்லூரி அதிபர் வெஸ்லியோ வாஸ் தெரிவித்தார்.

இருப்பினும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதைப் போன்று புனித மிக்கேல் கல்லூரியின் ஆரம்பப்பிரிவு நாளை புதன்கிழமை ஆரம்பமாகுமெனவும் அவர் கூறினார்.

க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணி மேற்கொள்ளப்படாத பாடசாலைகள் யாவும்  திங்கட்கிழமை (04) ஆரம்பமாகியுள்ளன.

விடைத்தாள்கள் திருத்தும் பணி மேற்கொள்ளப்படும் பாடசாலைகள் மாத்திரம், இவ்வருடம் முதலாம் தவணைக்காக 06ஆம் திகதி  ஆரம்பமாகுமென்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X