Niroshini / 2015 நவம்பர் 15 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்
கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற நூலகங்களுக்கான நூல்களைக் கொள்வனவு செய்வதற்கு 2015ஆம் ஆண்டு ரூபாய் 50 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் உள்ளூராட்சி மன்றங்களில் சிறந்ததாக தெரிவு செய்யப்பட்ட மட்டக்களப்பு மாநகர சபையின் நூலகத்துக்கு நூல்களை கொள்வனவு செய்வதற்கு அதில் 10 வீதம் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம். வை. சலீம் தெரிவித்தார்.
'வாசிகசாலையை நேசிப்போம் புத்தகங்களை நண்பர்களாக்குவோம்' எனும் தலைப்பில் மட்டக்களப்பு மாநகர சபை பூபாலசிங்கம் புத்தகசாலையுடன் இணைந்து ஏற்பாடு செய்த புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் மட்டக்களப்பு நகர மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம். உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
புத்தகமானது அறிவைத் தேடுவதற்கான ஒரு ஊடகமாகும். புதிய கண்டுபிடிப்பக்கள், புதிய செய்திகள் எல்லாம் ஆங்கிலத்தில் வெளிவருவது அதிகமாகவுள்ளன. கணினி மூலமான மின் புத்தகங்களால் பெறும் அறிவுசார் திறன்கள் மேம்படுகின்றன.ஆங்கில மொழியின் புலமையை அதிகரிப்பதற்கான மார்க்கங்களை நாம் தேடவேண்டும். கிழக்கு மாகாணத்தில் உள்ள 45 உள்ளூராடசி மன்றங்களில் மட்டக்களப்பு மாநகர சபை முதன்மை பெறுகின்றது என்றார்.
இதில்,மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். கிரிதரன், உதவி ஆணையாளர் என். தனஞ்செயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


3 minute ago
16 minute ago
31 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
16 minute ago
31 minute ago
32 minute ago