2025 மே 08, வியாழக்கிழமை

'மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகம் மழை பெய்யும்'

Niroshini   / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஆண்டில் பெய்த பருவப் பெயர்ச்சி மழையினை விட இவ்வாண்டு 10 வீதம் அதிகம்  மழை பெய்யும் என ஆய்வுகளில் மூலம் எதிர்வுகூறப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ வளவாளர் செ.ரமேஸ்வரன் தெரிவித்தார்.
 
வேள்ட் விஷசன் கிரான் பிராந்திய திட்டத்தின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை கிரான் ரெஜி மண்டபத்தில் நடைபெற்ற சமூக அடிப்படையிலான அனர்த்த முகாமைத்துவ பயிற்சியில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
வேள்ட் விஷசன் கிரான் பிராந்திய திட்ட இணைப்பாளர் ஆர்.அகிலானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து கூறுகையில்,

மனிதர்களினால் ஏற்படுத்தப்படும் மாற்றங்களினால் காலநிலை மாற்றம் ஏற்பட்டு அனர்த்தங்கள் ஏற்படுகின்றன. தற்போது வடகீழ் பருவப் பெயர்ச்சி ஆரம்பமாக முன்பு வெள்ள அனர்த்தமொன்றை எதிர்நோக்கியுள்ளோம்.

பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பமாக முன்பு அனர்த்த அபாயக் குறைப்பு செயற்பாடுகள் தொடர்பாக மக்களிடையே விழிப்பூட்டுவதன் மூலம் பாதிப்புக்களைக் குறைக்க முடியும்.

எமது பிரதேசங்கள் கடந்த காலங்களில் வெள்ளம் மற்றும் வரட்சியினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. வரட்சியால் பாதிக்கப்படும் பிரதேசங்களில் மழை நீர் சேமிப்பு திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.

பூகோள வெப்பமடைவதன் காரணமாக உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுவரும் காலநிலை மாற்றத்தினை எதிர்கொள்வதற்கு தற்போது பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X