2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் 30 புதிய பாலங்கள்

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 01 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் போக்குவரத்துப் பிரச்சினையைக் குறைக்கும் வகையில் மாவட்டத்தின் 08 பிரதேச செயலாளர் பிரிவுகளில் புதிதாக 30 கிராமியப் பாலங்கள் அமைக்கப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

இப்பாலங்களை அமைப்பதற்காக சுமார் 600 மில்லியன் ரூபாய் நிதி மத்திய அரசாங்கத்தின் மாகாண உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சால் செலவு  செய்யப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.  

போரதீவுப்பற்று, மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு, மண்முனை வடக்கு, ஏறாவூர்ப்;பற்று, கோறளைப்பற்றுத் தெற்கு, கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று வடக்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலேயே இப்பாலங்கள் அமைக்கப்படவுள்ளன.  

இப்புதிய பாலங்களுக்கான  வடிவமைப்பு வேலை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் 02 பாலங்களுக்கான வடிவமைப்பு வேலை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன்,  இவற்றுக்கான கட்டுமான வேலை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X