2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மண்முனை தென்மேற்கில் 17,560 ஏக்கரில் பெரும்போகம்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 2016 -2017ம் ஆண்டுக்கான பெரும்போகச் செய்கை 17,560 ஏக்கரில் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில்  கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில்  விவசாய ஆரம்பக்கூட்டம் நடைபெற்றது.

விதைப்பு வேலை எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 15ஆம் திகதிவரை  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயச் செய்கை காலங்களில் அடைச்சல் குளம், வெட்டிப்போட்டசேனை, கறுவாச்சோலை, புளுகுணாவை, கடுக்காமுனைகுளம், புளுகுணாவை மணல் ஏத்தம், காத்தமல்லியார் சேனை, பெருவெட்டை போன்ற இடங்களுக்கு மாடுகள் கொண்டுசெல்லப்படவேண்டும் என்றும் கூறப்பட்டது.

வங்கிகளால் வழங்கப்படும் விவசாயக் கடன்கள், விவசாய திணைக்களங்களினால் வழங்கப்படும் உரமானியம், காப்புறுதி, விதை விநியோகம், வனஜீவராசிகள் திணைக்களத்தின் சேவைகள் போன்றன குறித்தும் திணைக்கள உத்தியோகத்தர்கள் குறிப்பிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X