2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'மரியம் கிராமம்' கையளிப்பு

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 13 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் கிராம அலுவலகர் பிரிவில் உருவாக்கப்பட்ட 'மரியம் கிராமம்' பயனாளிகளிடம் திங்கட்கிழமை (12) கையளிக்கப்பட்டது.

கல்குடா ஸகாத் நிதியத்தின் ஏற்பாட்டிலும் பஹ்ரைன் நாட்டுத் தனவந்தர் ஒருவரின் நிதி உதவியுடனும் உருவாக்கப்பட்ட இக்கிராமத்தில் ஒரு  வீடும் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியில் 27 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் இக்கிராமத்தில் பள்ளிவாசல், சிறுவர் பூங்கா, கடைத்தொகுதி, பல்தேவைக் கட்டடத்தொகுதி, சிகிச்சை நிலையம் என்பனவும் அமைக்கப்பட்டுள்ளன.

இதன்போது, பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X