Niroshini / 2015 நவம்பர் 11 , மு.ப. 07:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்
தமிழ் அரசியல் கைதிகளை மைத்திரி தலைமையிலான அரசாங்கம் மீண்டும் ஏமாற்றிவிட்டது. இது இனவாதத்தின் உச்சக்கட்டம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
தமிழ்அரசியல்கைதிகளை பிணையில் விடுதலை செய்வதாக 28 தமிழ் கைதிகள் நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சட்டமாதிகாரியின் முடிவு இல்லையெனகூறி எதிர்வரும் நவம்பர் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டமை தொடபில் இன்று புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
பிணையில் விடுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டவர்களில் அனேகமானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் நிமித்தமாக சென்று நாடு திரும்பும்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டவர்களாவர்.
உண்மையில் பலவருடங்களாக தடுத்து வைக்கப்பட்ட எவரையும் நேற்று புதன்கிழமை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லவில்லை.ஆனால்,ஏதோ ஒருவகையில்அழைத்துச்செல்லப்பட்ட அப்பாவிகளையாவது பிணையில் விடுதலைசெய்யாமல் திரும்பவும் காலநீடிப்பு செய்தமை ஏமாற்றும் செயலாகும்.
கடந்த காலங்களில் தமிழ்த் தலைமைகளின் நெஞ்சில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடியாக குத்தினார். ஆனால், ஜனாதிபதி மைத்திரியோ தமிழ்த் தலைமைகளின் முதுகில் மறைமுகமாக குத்துகிறார் என்றார்.
மேலும்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக கடந்ந 2004ஆம் ஆண்டு தொடக்கம் மேற்கொண்ட முயற்சியால் சிறையிலிருந்த 800 தமிழ் அரசியல் கைதிகளில் படிப்படியாக பலர் விடுதலைசெய்யப்பட்டு தற்போது 217 தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமே உள்ளனர்.
அவர்களது விடுதலை தொடர்பில் ஜனாதிபதி சிரித்துக் கொண்டே சம்பந்தன் ஐயாவை ஏமாற்றுவதை காணக்கூடியதாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
28 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago