2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

வாகரையிலுள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கு அங்குள்ள பட்டதாரிகளை நியமிக்குமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2017 மார்ச் 27 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் (கோறளைப்பற்று வடக்கு) அமைந்துள்ள பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர்களுக்கான  வெற்றிடங்களுக்கு அப்பிரதேச செயலாளர் பிரிவைச்; சேர்ந்த பட்டதாரிகளை நியக்குமாறு கோறளைப்பற்று வடக்குப் பிரதேச பட்டதாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.  
 
இது தொடர்பில்  கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணனுக்கு மேற்படி சங்கத்தின் தலைவர் பொ.இராமச்சந்திரன் மற்றும் செயலாளர் இ.திசாந்தனும் கையொப்பமிட்டு இன்று (27)  கடிதம் அனுப்பியுள்ளனர்.
 
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'யுத்தம் மற்றும் சுனாமியால்; பாதிக்கப்பட்ட வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் சுமார் 100 ஆசிரியர்களுக்கு வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இங்கு 2012ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 25 மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்றுள்ள போதும்,   இதுவரையில் இங்குள்ள பட்டதாரிகளுக்கு  நியமனங்கள் வழங்கப்படவில்லை.  
 
கடந்த 14.02.2017 அன்று வழங்கப்பட்ட நியமனத்தில் கூட வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து 2  பட்டதாரிகள்; மட்டுமே  தெரிவுசெய்யப்பட்டார்கள். ஏனைய பட்டதாரிகள் எந்தவித வேலைவாய்;ப்பின்றி உள்ளனர்.    
இப்பிரதேச செயலாளர் பிரிவில் இதுவரை காலமும் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர் என்பதுடன், இவர்கள்  ஒரு வருடத்துக்கு மேல் இங்கு கடமையாற்றுவதில்லை. அவர்கள் தங்களின் சொந்த இடங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்கின்றார்கள். எனவே, இப்பிரதேச செயலாளர் பிரிவில் காணப்படும் ஆசிரியர்களுக்கான  வெற்றிடங்களுக்கு இங்குள்ள பட்டதாரிகளை நியமிக்க வேண்டுமென்று கோருகின்றோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X