Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 12 , மு.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திவெளிக் கிராமத்தில் வீடொன்றை தீ வைத்துக் கொளுத்திய சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவந்த ஒருவர், அம்பாறை, அட்டப்பள்ளம் பகுதியிலுள்ள வீடொன்றின் கூரைக்குள் மறைந்திருந்த வேளையில் இன்று புதன்கிழமை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த வீட்டுக் கூரையில் 24 வயதுடைய மேற்படி சந்தேக நபர் (வயது 24) மறைந்திருப்பதாகத் தெரியவந்த நிலையில், குறித்த வீட்டைச் சுற்றிவளைத்ததாகவும் இதன்போது, அவர் தப்பியோடுவதற்கு முற்பட்ட வேளையில் மடக்கிப் பிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
கடந்த ஓகஸ்ட் மாதம் 19ஆம் திகதி சந்திவெளிக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் வீடு முற்றாக எரிக்கப்பட்டது. இதன்போது, வீட்டிலிருந்த உடைமைகளும் தீக்கிரையாகின. இந்நிலையிலேயே, மேற்படி சந்தேக நபர் தேடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago