2025 மே 08, வியாழக்கிழமை

வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு

Niroshini   / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வறுமைக்கோட்டுக்குட்பட்ட 3 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

கரவெட்டி, நாவற்காடு மற்றும் மகிழவெட்டுவான் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் தலைமைத்தாங்கும் 3 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு சிறுகடை மற்றும் கோழி வளர்ப்புக்கான உதவிகள் வழங்கப்பட்டதாக அகம் இளைஞர் அபிவிருத்தி அமைப்பின் வெளிக்கள உத்தியோகத்தர் பி. பிரதீபா தெரிவித்தார்.

இந்நிகழ்வில், வவுணதீவுப் பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர் எஸ். சுதாகர், எஸ். ராஜ்பாபு, அகம் இளைஞர் அபிவிருத்தி அமைப்பின் உதவித் திட்ட இணைப்பதிகாரி எஸ். நிரஞ்சினி, வெளிக்கள உத்தியோகத்தர் பி. பிரதீபா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X