Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 19 , மு.ப. 07:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு வாழ்வின் எழுச்சித்திட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்காக 84 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் பி.குணரட்ணம் தெரிவித்தார்.
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாழ்வின் எழுச்சித்திட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உபகரணங்களை வழங்கி வைக்கும் வைபவம் புதன்கிழமை (18) மாலை மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இதில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இங்குள்ள மக்களின் வறுமையை போக்கி அவர்களின் வாழ்வதாரத்தை மேம்படுத்துவதற்காக அவர்களுக்கு வாழ்வதார தொழில் உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.
அந்தவகையில், கடந்த ஆண்டு 55 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வின் எழுச்சித்திட்ட பயனாளிகளுக்கு வாழ்வதார உபகரணங்கள் வழங்கப்பட்டன.
அதேபோன்று, இந்த வருடமும் 84 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இந்த வாழ்வாதார தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டுவருகின்றன என்றார்.
மேலும்,இந்த வாழ்வாதார உபகரணங்கள் 90 வீத மானிய அடிப்படையிலும் சில பயனாளிகளுக்கு 40 வீதத்திலான மானிய அடிப்படையிலும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த திட்டத்துக்காக விதவைகள்,அங்கவீனர்கள் மற்றும் வறுமைக் கோட்டுக்குட்பட்ட குடும்பங்களிலிருந்து பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தொழில் உபகரணங்களை பெறும் பயனாளிகள் உரிய நோக்கத்துக்காக பயன்படுத்த வேண்டும். இதை வாழ்வின் எழுச்சி திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மதிப்பீடு செய்வார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago