Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 19 , மு.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பின் எல்லைப் பகுதியில் போதியளவான அரசாங்கக் காணிகள் காணப்படும் நிலையில், அங்கு மதுபானசாலையை அமைத்திருக்க முடியும். ஆனால், தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை திட்டமிட்டு அழிக்கும் வகையில் மக்கள் குடியிருக்கும் பகுதியான கல்குடாவில் மதுபானசாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கான இணைப்பாளர் கணேசன் பிரபாகன் தெரிவித்தார்.
கல்லடியில் செவ்வாய்க்கிழமை (18) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது,
'தமிழ் மக்களின்; வாழ்வாதாரத்தை அடியோடு அழித்து, அவர்களின் பொருளாதாரத்தை நசுக்கி, அவர்களை மதுபானத்துக்கு அடிமையாக்கி, மண்ணிலிருந்து அகற்றுவதற்கே தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது' என்றார்.
'தற்போது தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பினர் தங்களுடைய பொருளாதார இலக்கை நோக்கியே செயற்படுகின்றனர். தமிழ் மக்களுக்கு வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பாக எந்தவித நடவடிக்கையையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை.
தமிழ் மக்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தவிர, வேறெந்தத் தெரிவும் இருக்காத காரணமாக கடந்த காலத்தில்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்தனர். ஆனால், இனிவரும் காலத்தில்; தமிழ் மக்களுக்கு ஜனநாயகப் போராளிகள் கட்சி தலைமைத்துவம் வழங்கும்' என்றார்.
11 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
2 hours ago