Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 30 , மு.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். பாக்கியநாதன்,வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக நெற்செய்கை பண்ணப்பட்ட 152,000 ஏக்கர் காணியில் 63,516 ஏக்கர் காணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 21,000 பேருக்கு 220 மில்லியன் ரூபாய் நஷ்டஈடாக வழங்கப்பட்டுள்ளன என மட்டக்களப்பு மாவட்ட கமத்தொழில் அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் எந்திரி என்.சிவலிங்கம் தெரிவித்தார்.
2014ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான கமத்தொழில் காப்புறுதி நஷ்டஈட்டுக் காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு நகர மண்டபத்தில் நடைபெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
குறித்த நஷ்டஈடுகளானது 100 வீதம், 60 வீதம், 40 வீதம் பாதிக்கப்பட்டவர்கள் என வகைப்படுத்திய நிலையில் வழங்கப்பட்டுள்ளன.இதில் 100 வீத பாதிப்புக்கள் ஏற்படவில்லை. பெருநீர்ப்பாசனத்தில் 5 ஏக்கர் காணி, 60 வீதம் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு தலா ரூபாய் 46,000க்கும் மேல் நஷ்டஈடாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், மானாவாரியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தலா ரூபாய் 5,000 முதல் ரூபாய் 6,000 வரை வழங்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும்,மாவட்டத்தில் 40,000 ஏக்கர் காணிகளுக்கு நஷ்டஈடு வழங்கமுடியாமல் நிராகரிக்கப்படும் நிலை காணப்பட்டபோதும் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம் என்பதற்காக அதற்கும் நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் வடிச்சல் கால்வாய் உள்ள வயல்காணிகளுக்கு மட்டுமே நஷ்டஈடு வழங்கப்படும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் போதிய நீர்ப்பாசன வசதிகள் இல்லாமல் 112 ஆயிரம் ஏக்கர் காணிகள் உள்ளன. சிறுகுளங்களை புனரமைப்பதற்காக ஏனைய மாவட்டங்களுக்கு 30 மில்லியன் ரூபாய் வழங்கியும் புனரமைக்கப்படாமல் நிதி திரும்பிப்போயுள்ள நிலை உள்ளன.
ஆனால், மட்டக்களப்பு மாவட்டத்துக்கு 60 மில்லியன் ரூபாய் செலவளிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ள குளங்கள் அனர்த்தத்தினால் பாதிக்கப்படாமல் உள்ளது.இதைவிட கூடிய நிதி செலவளித்து புனரமைக்கப்பட்ட குளங்கள் சேதமடைந்துள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
52 minute ago
1 hours ago