Suganthini Ratnam / 2016 ஜூன் 24 , மு.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
வட்டியில்லா கடன் திட்டத்தினை ஊக்குவிப்பதன் மூலம் சமூகத்தில் வட்டியை குறைக்க முடியுமென காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் தெரிவித்தார்.
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வட்டியில்லா கடன் வழங்கி வைக்கும் நடவடிக்கை இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், 'காத்தான்குடிப் பிரதேச செயலாளர் பிரிவில் பல்வேறு வட்டியில்லா கடன் திட்டத்தினை அறிமுகப்படுத்தி அதை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். பல்வேறு நிதி நிறுவனங்களிலும் அதிக வட்டிக்கு கடன் எடுத்து அதனை செலுத்த முடியாமல் அசௌகரியங்களையும் பலர் சந்தித்து வருகின்றனர். இதனால், பல தாக்கங்களும் சமூகத்தில் ஏற்படுகின்றன. இதனை ஒழிக்கும் வகையில் சமூகத்தில் வட்டியில்லா கடன் திட்டத்தினை அறிமுகப்படுத்தி அந்த திட்டம் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த வட்டியில்லாக் கடனை பெறும் பயனாளிகள் உரிய தொழிலை சிறப்பாக மேற்கொண்டு தமது வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
வேறு நோக்கத்துக்காக இந்த கடனை பயனாளிகள் பயன்படுத்தக்கூடாது' என்றார்.
இதன்போது 25 பயனாளிகளுக்கு பயனாளி ஒவ்வொருவருக்கும் 25,000 ரூபாய் படி வழங்கி வைக்கப்பட்டது.

23 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
9 hours ago