2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'வடக்கு, கிழக்கு பிரிந்தே இருக்க வேண்டும்'

Niroshini   / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
 
வடக்கும் கிழக்கும் பிரிந்தே இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வடக்கு, கிழக்கு இணைக்கப்படக் கூடாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

ஏறாவூர் ஸாறா முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று (22) நடைபெற்றது.இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே  அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றகையில்,

1988ஆம் ஆண்டு இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் படி இரவோடு இரவாக ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்த்தனவினால் வடக்கும் கிழக்கும் ஒன்றாக இணைக்கப்பட்டது. இந்தியாவின் அழுத்தத்தினால் இந்த இரண்டு மாகாணங்களும் இணைப்பட்டன.
 
இந்த இணைப்பினால் கிழக்கு மாகாணத்தில் 33 சதவீதமாக இருந்த முஸ்லிம் மக்கள்,17 சதவீதமாக தள்ளப்பட்டனர்.
அன்றிலிருந்து வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட வேண்டும் என பல சந்தர்ப்பங்களில் முஸ்லிம் அரசியல் தலைவரகள் கோரிக்கை விடுத்தனர்.

இதன்பின் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் 2006ஆம் ஆண்டு வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டது.

தற்போது நல்லாட்சி அரசாங்கத்தின் பலவீனமான போக்கை சில அரசியல் கட்சிகள் சாதகமாக பயன்படுத்தி மீண்டும் வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் முயற்சியில் மறைமுகமாக ஈடுபட்டு வருகின்றன என்றார்.

மேலும்,எதிர்வரும் காலங்களில் கிழக்கு மாகாண சபையில் வடக்கும் கிழக்கும் பிரிந்து இருக்க வேண்டும் என்ற தனிநபர் பிரேரணையை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம்

வடக்கு, கிழக்கு பிரிந்திருப்பதன் மூலமே தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் தமது இனரீதியான உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X