2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

7 வயது சிறுமி வன்புணர்வு: சிறுவனுக்கு விளக்கமறியல்

Gavitha   / 2016 மே 04 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ.ஹூஸைன, எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட சிகரம் கிராமத்தில் சிறுமியொருவரை வன்புணர்வுக்குட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில், கைது செய்யப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவனை எதிர்வரும் 17ஆம திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி நேற்று செவ்வாய்க்கிழமை (03) உத்தரவிட்டார்.

இரண்டாம் ஆண்டில் கல்வி கற்கும் 7 வயதுடைய சிறுமியே இவ்வாறு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த சிறுமியின் ஒன்றுவிட்ட மாமா முறையான சிறுவனே இச்சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

குறித்த சிறுவன், சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து போவதாகவும் இந்நிலையில் திங்கட்கிழமை (02) காலை குறித்த சிறுமி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சிறுமி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டமை தொடர்பாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், இந்தச் சிறுவனை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X