Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Thipaan / 2016 ஜனவரி 06 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
வறிய மாணவர்களுக்கு உதவுவதில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் முன்னிற்பதைப் பாராட்டுவதாக ஏறாவூர்ப்பற்று- செங்கலடி பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர் தெரிவித்தார்.
பிரதேச செயலகத்தில் பல்வேறு படித்தரங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் நன்கொடையுடனும் பிரதேசத்தில் உள்ள பரோபகாரிகளின் அன்பளிப்புகளுடனும் வறிய மாணவர்களுக்கு உதவும் 'கல்விக்குக் கைகொடுப்போம் திட்டம்' ஆரம்பிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் ஏறாவூர்ப் பற்று செங்கலடிப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வறுமைக் கோட்டுக்கீழ் வாழும் 300 மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளும், புத்தகப் பைகளும் வழங்கப்பட்டதாக பிரதேச செயலளார் யூ. உதயஸ்ரீதர் மேலும் தெரிவித்தார்.
பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அந்தப் பிரதேசத்தில் வாழும் வறிய மாணவர்களின் கல்விக்காக மனமுவந்து நன்கொடை அளித்திருப்பதைப் பாராட்டிய பிரதேச செயலாளர் உதயஸ்ரீதர் உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பான சேவையினால் பரோபகாரிகளிடமிருந்து கல்விக்காக உதவி பெற்று வறிய மாணவர்களுக்கு உதவும் மனப்பாங்கையும் பாராட்டினார்.
இந்நிகழ்வில் ஏறாவூர்ப் பற்று செங்கலடி உதவிப் பிரதேச செயலாளர் நவரூபரஞ்சனி முகுந்தன், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ரீ. மதிராஜ், சிறுவர் பாதுகாப்பு உத்தியொகத்தர் ரீ. யேசாந்தினி, முன்பிள்ளை அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம். சர்ஜுன், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.என்.எப். பர்ஸானா, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ. செல்வநேசன் உட்பட இன்னும் பல அதிகாரிகளும் மாணவர்களும் பெற்றோரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago