Thipaan / 2015 நவம்பர் 14 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
'பிரகாசிக்கும் மாணவர் கல்விக்கான புலமைப் பரிசில்' என்ற செயற்றிட்டத்தின் கீழ், வறிய மாணவர்கள் 127 பேருக்கு மாதாந்தம் உயர் கல்விக்கான உதவு தொகை வழங்கி வைக்கப்படுவதாக பெரெண்டினா எனப்படும் தன்னார்வ உதவு நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் எஸ். தினேஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மஹாஜனக் கல்லூரியில் சனிக்கிழமை இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு, பட்டிப்பளை, வாழைச்சேனை, மற்றும் கிரான் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த உயர்தரம் கற்கும் திறமையான வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள மாணவர்கள் இந்த உதவு தொகைகளைப் பெற்றுக் கொண்டார்கள்.
கலை, வர்த்தகம், தொழிநுட்பம்; ஆகிய பிரிவுகளில் கற்கும் மாணவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாவும், உயிரியில் மற்றும் கணிதப் பிரிவில் கற்கும் மாணவர்களுக்கு தலா ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் என்ற அடிப்படையில் 127 மாணவர்களுக்கான இந்தத் திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
இன்றைய நிகழ்வில் 80 மாணவர்கள் இந்தக் கொடுப்பனவுக்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள்.
இதற்கு முன்னர் கடந்த இரண்டு வருடங்களாக 104 மாணவர்கள் மாதாமாதம் இந்த உதவு தொகையைப் பெற்று வருகின்றார்கள் என்றும் தினேஸ் தெரிவித்தார்.
மேலும் இந்த மாணவர்களிலிருந்தும் திறமை அடிப்படையில் ஐந்து மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு தேசிய மட்டத்தில் கொழும்பில் நடக்கும் நிகழ்வில் புலமைச் சான்றிதழ் வழங்கப்படவிருக்கின்றன.
அத்துடன் இந்த உதவியைப் பெறும் மாணவர்கள் தமது திறமையை வெளிக்காட்டி பல்கலைக் கழகக் கல்வியைத் தொடர்வார்களாயின் தொடர்ந்து அவர்களது பல்கலைக்கழக கல்வி முடியும் வரை இந்த இந்த உதவு தொகை தொடரும் என்று மாவட்ட முகாமையாளர் எஸ். தினேஸ் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உதவி மாவட்டச் செயலாளர் எஸ். ரங்கநாதன், புனித ஆன்ற் தேவாலய போதகர் அடிகளார். எக்ஸ். ஐ. ரஜீவன், பெரெண்டினா தன்னார்வ உதவு நிறுவனத்தின் தலைவர் டுலான் டி சில்வா, மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் எஸ். தினேஸ், அபிவிருத்தி முகாமையாளர் பி. குஷாந்த், திட்ட அலுவலர் ஐ. தினுஜா வேர்ள்ட் விஷன் நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் அலெக்ஸ் பென்ஜமின் உட்பட வங்கி முகாமையாளர்கள், பாடசாலை அதிபர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், பயனாளிகளான மாணவர்கள், பெற்றோர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.



28 minute ago
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
56 minute ago
2 hours ago