2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'வழக்குகளுக்கு கிராமசேவகர்கள் ஆஜராக வேண்டும்'

Niroshini   / 2016 ஒக்டோபர் 15 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

குற்றவாளிகள் ஆஜராகாத வழக்குகள் மற்றும் பாராமரிப்பு வழங்குகளில் கிராம சேவகர்கள் ஆஜராகி சாட்சியமளிக்க வேண்டும் என மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராஜா நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

கிராம சேவகர்கள் தமது கிராம எல்லைக்குட்பட்ட எதிரிகள், பிரதிவாதிகளின் வதிவிட விபரங்களை வெறும் அறிக்கை மூலம் கடந்த காலங்களில் அனுப்பிவந்துள்ளனர்.
 
எதிர்வரும் காலங்களில் கிராம சேவையாளர்கள் வதிவிட அறிக்கைகளை வெறுமனே அறிக்கை மூலம் நீதிமன்றுக்கு அனுப்பாது, நீதிமன்றில் நேரடியாக ஆஜராகி சாட்சியமளிக்க வேண்டும் என  மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர்களுக்கும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X