Editorial / 2018 மார்ச் 29 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு, காத்தான்குடியில் மோட்டார் சைக்கிளால் ஆசிரியை ஒருவரை மோதி விட்டுத் தப்பிச் சென்ற 10ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்கள் இருவரை, சி.சி.டி.வி கமெராவின் உதவியுடன், காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேற்படி ஆசிரியை, தனது கணவருடன் காத்தான்குடி, கர்பலா வீதியில் மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்திலிருந்து நேற்று (29) காலை, பாடசாலைக்குப் பயணித்துள்ளார்.
இதன்போது, மோட்டார் சைக்கிளொன்றை வேகமாகச் செலுத்தி வந்த மாணவர்கள் இருவர், குறித்த ஆசிரியை சென்ற மோட்டார் சைக்கிளின் மீது மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதில், கடும்காயத்துக்கு உள்ளான குறித்த ஆசிரியை, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த காத்தான்குடி பொலிஸார், அவ்வீதியிலுள்ள சி.சி.டி.வி கமெராக்களைப் பரிசோதனை செய்து, குறித்த மாணவர்கள் இருவரையும் கைதுசெய்ததுடன், அம்மாணவர்கள் செலுத்திய மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த மாணவர்கள் இருவரும், தினமும் காலை வேளையில் இவ்வாறு வேகமாக மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்துள்ளனரெனவும் இதனால் அவ்வீதியால் செல்லும் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பாதசாரிகளுக்கு இடைஞ்சலாக இருந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரமின்றி தலைக்கவசம் அணியாமல், தனது உறவினரின் மோட்டார் சைக்கிளிலேயே, இம்மாணவர்கள் சுற்றித் திரிந்துள்ளார்கள் என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
13 minute ago
31 minute ago
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
31 minute ago
49 minute ago
2 hours ago