2026 மே 06, புதன்கிழமை

11 வர்த்தகர்களுக்கு தண்டம்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 05 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் மோசடியான முறையில் வர்த்தக நடவடிக்கைககளில் ஈடுபட்ட 11 வர்த்தகர்கள் கைதுசெய்யப்பட்டதாக அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலக பொறுப்பதிகாரி வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். 

அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் கடந்த மே மாதம் நடத்திய சோதனையின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட 11 வர்த்தகர்களும் மட்டக்களப்பு,  களுவாஞ்சிக்குடி, ஏறாவூர், வாழைச்சேனை ஆகிய நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில்  இவர்களிடமிருந்து 64,500 ரூபா தண்டம் அறவிடப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சரியான அளவு நிறுவை இன்மை, முத்திரை இடாத நிறுத்தல் அளவைக் கருவிகளை பயன்படுத்தியமை ஆகிய மோசடிகளில் ஈடுபட்டார்களென்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .